உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு குளித்து மணற்கொண்ட கல்லா இளமை புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால் தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும் பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும். திணிமணற் பாவை உருகெழு கையின் தேன்படு சிதரினும் பலவே பலவே. சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌ பிஞ்சுவயதின் பூஞ்சினைக்  கையள் குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய‌ வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய‌ நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே . – சொற்கீரன் [ வாய்க்காலில் குளிக்கும்  போது ஆழமாய்  முக்குளி…