திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்
திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல் உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…
தமிழ்மொ ழியால் ஓதி நீ தொண்டு செய்! – நாமக்கல் கவிஞர்
3,4 / 6 இளந்தமிழனுக்கு அன்பி னோடும் அறிவு சேர்ந்த ஆண்மை வேண்டும் நாட்டிலே; அச்ச மற்ற தூய வாழ்வின் ஆற்றல் வேண்டும் வீட்டிலே. இன்ப மான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும் எம்மு டன்பிறந்த பேர்கள் என்ற எண்ணம் வேண்டும். துன்ப மான கோடி கோடி சூழ்ந்து விட்ட போதிலும் சோறு தின்ன மானம் விற்கும் துச்ச வாழ்வு தொட்டிடோம்! என்ப தான நீதி யாவும் இந்த நாட்டில் எங்கணும் இளந்த மிழா! என்றும் நின்றே ஏடெ டுத்துப் பாடுவாய்! 3 …