பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
வேங்கடமலை தமிழர்க்குரியதே!
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குஎல்லையாக இருந்தமலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாகஇருந்தது. இது இப்போதுதிருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக்கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்: பக்கம்.31
மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்
(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல்” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான். தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர்…
மாமூலனார் பாடல்கள் – 18 : சி.இலக்குவனார்
(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி) 18. பழிதீர்மாண் நலம் தருகுவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை நோக்கித் தோழி கூறுகின்றாள்: மழைக்காலத்தில் பூக்கும் பிச்சிப் பூப்போன்ற கண்களையும் மணம் வீசும் கூந்தலையுமுடைய நல்லாய்! தலைவர் வேற்றுநாடுதான் சென்றுள்ளார். வீரக்கழலை அணிந்துள்ள புல்லி என்பானின் பாதுகாவலுக்குட்பட்டுள்ள வேங்கடமலையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அம்மலைப் பக்கங்களில் நீர் என்பதே இராது. மலையில் உள்ள…