மை வைத்துப்பார்க்கும் மக்கள்! – வேங்கடராம்
மை வைத்துப்பார்க்கும் மக்கள்! தேர்தல் வெல்வது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காற்று வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் போயோ வாக்களியுங்கள்! குருட்டு வாக்கில் மட்டும் வேண்டா! *****. வாங்கிய வாக்குகள் கொடுத்த வாக்குகளை மறக்கடிக்கக் கூடாது! ***** நேர்மை வாய்மை கடமை உரிமை வறுமை கொடுமை நன்மை திறமை செம்மை மடமை . . . போக்கச் சில மைகள் . . . ஆக்கச் சில மைகள் . ….