இஃன்போசிசு கொண்டாடிய வேட்டிநாள்
வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு
பரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு கூட்டு நெசவு (கோஆ டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாகக் கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை…