வேட்பாளர் மாண்பு தலைவர்: தகுதி என்ன? தலைமைக் கெவ்வளவு மிகுதியாய் நன்கொடை மேல்நீ தருவாய்? வேட்பாளர்: அம்மா வுக்கொன் றளித்துச் சின்ன அம்மா வுக்கும் அளித்து விட்டேன்! அடுத்தத் தலைவர்க் களிக்கும் பெட்டியும் அண்ணிக் கொன்றும் அணியம் ஐயா! தலைவர்: உன்றன் தாய்மொழி என்னவோ உரைப்பாய்? வேட்பாளர்: அன்புத் தமிழ்தான் அகத்தில் வேறு! தலைவர்: தமிழெனச் சொல்லு தமிழெனச் சொல்லு! வேட்பா- தமிழ்தான் தமிழ்தான் தாய்மொழி எனக்கு! தலைவர்: தொகுதி மதிப்பு மிகுதியாய் உண்டா? வேட்பாளர்: தொகுதி முழுவதும் மிகுதியாய் உள்ளவர், நம்சாதி மக்கள்!…