தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’ ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்! இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது.. இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை…