செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!
செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்! பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார். சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 / மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர்…