மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!
மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…