தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி – தொடர்ச்சி) புராணம் புகழும் நெல்லை வேணுவனத்தில் வேய்முத்தர் திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த…