தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்
தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது. 10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…
இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்
புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட ‘இலக்கு‘, ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.
துபாயில் புகழ்மிகு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை
அமீரகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு
– முதுவை இதாயத்து
தொடரித்துறையில் வேலைவாய்ப்பு – எழுச்சிப் பேரணி
ஒருங்கிணைந்த தொடர்வண்டிப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி தமிழர் எழுச்சி இயக்கம் நடத்திய கோட்டை நோக்கி மாபெரும் பேரணி! ஒருங்கிணைந்தரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித்துறையில் பயிற்சி முடித்த 5000 தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஐ.சி.எப் மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறை வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நேற்றுஎழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலில் தொடடங்கி கோட்டைநோக்கிப்பேரணி நடைபெற்றது. பேரணியைத்தமிழர் எழுச்சி…