மீட்டுருவாக்கம் செய்க! – தமிழண்ணல்
மீட்டுருவாக்கம் செய்க வடமொழிப் பெயர்ப்படுத்தல்- அதாவது எப்பெயரையும் வடமொழிப் பெயராக மாற்றுதல் ஒரு ‘சமக்கிருதமயமாக்கும்’ முறையாகும். அங்கயற்கண்ணி என்பதை, மீனாட்சி என்னும் சொக்கரைச் சுந்தரர் என்னும் மாற்றினர். ‘தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அங்கு குடிகொண்டுள்ள இறைவன் இறைவியர்க்கும் நல்லநல்ல தமிழ்ப்பெயர்கள் வழங்கின. அவை அனைத்தும் பொருள் புரிந்தும் விளங்காமலும் வடமொழிப் பெயர்களாக்கப்பட்டன. இளையாத்தன்குடியை இளையாற்றங்குடி எனத் தவறாக எண்ணிக்கொண்டு, ‘விச்ராந்திபுரம்’ எனப் புராணம் எழுதியதை என்ன சொல்ல? ‘பாலை நிலையம்’ என்பதில் பாலுக்கு எவ்விதத் தொடர்புமில்லாதிருக்கவும், அதை ‘சீரத்தலம்’ எனப் பெயர்த்துச் ‘சில்ப’ சாத்திரமாக்கியதை…
தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது – தமிழண்ணல்
தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது பிற உலகத்தொன்மை இலக்கியங்கள் யாவும் மேலுலகக் கடவுளர் பற்றியனவாகவும், அம்மேலுலகினர் கீழே இறங்கி வந்து தெய்வத் தன்மை அல்லது அசுரத் தன்மையுடையவர்களுடன் கலந்து இடம் பெற்றனவாகவுமே முற்றிலும் காணப்படும். தமிழர்தம் தொன்மைக் குறிப்புகள் இவ்வுலகம் சார்ந்து, தெய்வத்தன்மை உற்றன பற்றியன. இவ்வுலகினராய் ‘வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகியவர்’ பற்றியன. மேலிருந்து கீழே வந்தவர் பற்றியனவாகாமல், கீழேயிருந்து மேலே சென்றவர் பற்றியன. கண்ணகி, மணிமேகலை மட்டுமின்றி, ‘தமிழர் தேசியக் காப்பியம்’ எனச் சமயப் பெரியோரால் போற்றப்பட்ட பெரியபுராணமும் கீழிருந்து…