மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி
மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் தொடங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, மாழை(உலோக)த்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவற்றை எழுதக் கூடிய பொருட்களாகப் பயன்படுத்தினர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள்…