சிலம்பாறு – வே.முத்துவிசயன்
ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்….