கலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin
45 உரனி- Vitamin உயிர்ச்சத்து எனப் பலராலும் குறிக்கப்படும் ‘வைட்டமின்’ என்பதற்கு வேளாணியல், பயிரியல், வேதியியல் ஆகியவற்றில் ‘உயிர்ச்சத்து’, ‘வைட்டமின்’ என்றும். மீனியல், மனையியல் கால்நடைஅறிவியல் ஆகியவற்றில ‘உயிர்ச்சத்து’ என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘வைட்டமின்’ அல்லது ‘விற்றமின்’ என ஒலிபெயர்ப்பு அடிப்படையில் அயற்சொல்லையே கையாளுகின்றனர். இதற்கு நாம் சங்கச் சொல் அடிப்படையில் புதுச்சொல் அறிந்து பயன்படுத்த வேண்டும். உரன் (19) என்னும் சொல் மன உறுதி, பற்றுக்கோடு என்னும் பொருள்களில் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன. [சிறுபாணாற்றுப்படை (115,190); நற்றிணை (3-6, 333-5);…