மொழி பெயர்ப்போம்! – அருணகிரி

மொழி பெயர்ப்போம்!  உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின் நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள்,  தொழிலாளர்கள் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி உருவான பல…

மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.   இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…

சங்க இலக்கியப் பயிலரங்கு,

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி  எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை   ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து,  நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப  நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…

தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி

  தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி – இலக்குவனார் திருவள்ளுவன்   படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்….