ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – வைப்புத் தலங்கள்
(ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சிரீ அடை மொழி ஊர்ப்பெயர்கள்-தொடர்ச்சி) வைப்புத் தலங்கள் தேவாரப் பாமாலை பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்றும், அப் பாசுரங்களில் பெயர் குறிக்கப் பெற்ற தலங்கள் வைப்புத் தலங்கள் என்றும் கூறப்படும். எனவே, திருப்பாசுரத் தொடர்களையும், சாசனங்களையும் துணைக் கொண்டு வைப்புத் தலங்களுள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம். பேரூர் பேரூர் என்னும் பெயருடைய சில ஊர்கள் சிறந்த சிவத்தலங்களாய் விளங்குகின்றன. “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே” என்று சுந்தரர் பேரூர் இறைவனைக்…