(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 16 வழி நடத்தித் தலைமை தாங்கு!   வாழ்வியல் கடமைகளாகப் பலவற்றைக் கூறும் மாபெரும் கவிஞர் பாரதியார் தலைமைப் பண்பையும் வலியுறுத்துகிறார்.         “உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி                 வையத் தலைமையெனக்கு அருள்வாய்” (பக்கம் 133 | யோக சித்தி) என்பதன் மூலம் கல்வி, தொழில், பண்பு முதலானவற்றில் சிறந்திருக்க வேண்டிய நம் இலக்கு ‘வையத் தலைமையே’ என்பதை அடையாளம் காட்டுகிறார். எனவே, பொறுப்பு கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காகச் ‘சுமையினுக்கு…