இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் 2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும்.1 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 2 தமிழ்மொழி, முண்டா திராவிடம் ஆரியம் என்னும் மூன்றினாலும் உருவாயது என்று வையாபுரிப்பிள்ளை கூறுகின்றார். (It is clear that the Tamil Language is a Composite texture of three elements, viz, the Munda, the Dravidian and Aryan, the Dravidian elements predominating. History of Tamil language and literature-Page 5) வையாபுரியார் கருத்துப்படி, தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பது…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும் 1.
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) 10. பழந்தமிழும் தமிழரும் மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும். ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள் நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கட் கூட்டத்தினருள் பெரும் பகுதியினர் மொழியாலேயே வேறு படுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர் பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம் பெயர் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்குரியவர் ஆதலின் தமிழர் எனப்பட்டனர். தமிழ் என்றாலும் தமிழர் என்ற…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5). தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார். ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…