அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்
அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம். எழுத்தாளர்கள்,…
செல்வி ப.இரா.நிகாரிகாவின் இசைப்பேழை வெளியீடு, சென்னை
மரு.இராசுகுமார்-சுவர்ணசிரீயின் திருமகளும் முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப.(நி) – மணிமேகலை, திரு பழனியப்பன்-முத்துராதா ஆகியோரின் அன்புப்பெயர்த்தியுமான 7-ஆம்வகுப்பு பயிலும் செல்வி ப.இரா.நிகாரிகாவின் ‘அழகு தமிழ் முருகா‘ என்னும் இறைப்பாடல்கள் ஒலிப்பேழை, சென்னை உருசியக் கலை-பண்பாட்டு மையத்தில் ஐப்பசி 20,2047 / நவம்பர் 05,2016 மாலை வெளியிடப்பட்டது. இசையறிஞர் பாலமுரளிகிருட்டிணா ஒலிப்பேழையை வெளியிடத் தமிழ்ப்புரவலர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். திரு வை. பழனிச்சாமி இ..ஆ.ப., வரவேற்புரை யாற்றினார். நல்லி குப்புசாமி, இந்தியப் பண்பாட்டு உறவுக்குழு (ICCR), மண்டல இயக்குநர் திரு ஐயனார், மரு.சீர்காழி சிவசிதம்பரம், ஒலிப்பேழையின்…