வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! அரசியலாளர்களுக்கும் பிறருக்கும் உள்ள இலக்கணமே வாக்கு மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான் ஆக வேண்டியுள்ளது. தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே! பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்! யாரும் வாக்கு…