வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 எண்ணெழுத் தறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 21. எண்ணெழுத் தறிதல் 201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம். எண் என்பது கணிதம் ஆகும். 202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம். எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும். 203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப. எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம். 204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது. எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும். 205.எழுத்தறி யார்பிற வெய்துத லரிது. எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை…