வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. ஆசிரியரை யடைதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6 தொடர்ச்சி) 7 7.ஆசிரியரை யடைதல் அறிவினைத் தருபவ ராமா சிரியர். அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார். இருபா லாருந் தருவதற் குரியவர். ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர். அறிவு வகையா னாசிரி யர்பலர். பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர். எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது. ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல். மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…