செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3
(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3 தொடர்ச்சி) “மகராசி என்னும் வள்ளி யம்மையைநன்மனை அறங்களை நன்கு வளர்த்திடமுன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்……………………………………………………………….எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமேகனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்என்னை நட்டோர் யாவரும் தன்னுடைஉயிரெனக் கருதி ஊழியம் புரிந்தசெயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.” இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம். 3. உரையாசிரியப் பணி நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்….
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3
(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி) 1. மொழிபெயர்ப்புப் பணி சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு : “இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க…
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3
(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி) செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்….
‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலகத் தமிழ்ச் சங்கம் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள் இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . பதிவுப்படிவம்https://tinyurl.com/2w8aw8a9இணைப்புhttps://tinyurl.com/25u64t9yகூட்ட அடையாள எண்:203 717 1676நுழைவுச்சொல்: wtsஅனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!