வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….