மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் ‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள். இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்….
‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்
காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை ‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர் வேலரசு (எ) தமிழரசன், தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். நூலைப் படித்துப் பார்த்தபோது, இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது என்று தோன்றியது. மறைந்த தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள், குறள் வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ”பார்த்தால் குறள், படித்தால் பொருள்” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால்…
மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
தமிழ்மண்பதிப்பகத்தின் வ.சுப.மாணிக்கம் நூல்கள் மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை
ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு பிற்பகல் 2.30 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு
திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்
செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால்…
வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக எதிர்வரும் ஆகத்து – (2016) திங்கள் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவும், “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எனவே, மதிப்பிற்குரிய மேனாள்துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள் தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும்…
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன் பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின்…
புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் – மு.இளங்கோவன்
புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக்கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம்மாணவர்களின்நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண்…
மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! – முனைவர் அ. அறிவுநம்பி
மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும். சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். “கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே தவிர அவளைக் கற்பி என உலகு போற்றியிருக்குமா?” இப்பகுதியில் ‘கள்வன்’ என்ற ஆண்பாலுக்குரிய பெண்பாலாகக் ‘கள்வி’ என வருதலும் கற்புடை மங்கை என்ற பொருளை…
சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன!
சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன! சங்கக் காலத்துப் புலவர்களின் இலக்கிய வன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது, அளக்கமுடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும், ஒன்று பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையுடையனவாகவே உள. நூல் நூறு எழுதியோர் திறஞ்சான்றோர் எனவும், தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோபோல நூல் ஒன்றே எழுதினார் திறஞ்சாலார் எனவும் கூறுவதுண்டோ? எல்லாம் சிந்தனைத் திறத்தைப் பொறுத்தது. சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக்கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி….
தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! – வ.சுப.மாணிக்கம்
தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஓர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு; தமிழ்மொழியின்…
தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!
: தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்! தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரிபாடல்: 9) “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…