தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:       “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….

தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423) தமிழே விழி!                                                                                                  தமிழா விழி!              தமிழ்க்காப்புக்கழகம் சிறப்புக் கூட்டம்: என்றென்றும் வாழும் தொல்காப்பியமும் என்றும் இல்லா அகத்தியமும் இணைய வழி நிகழ்வு நாள் : மாசி 11, 2056 / 23.02.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்        தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரைஞர்கள் முனைவர் வா.நேரு மாநிலத்…

அகத்தியர் என்ற சொல் தமிழே! – அ.சிதம்பரனார்

அகத்தியர் என்ற சொல் தமிழே!   அகத்தியர் என்ற சொல்லை அகத்தியம் என்ற வடசொல்லின் திரிபு என நம் நாட்டில் பலர் நம்பி வருகிறார்கள். அகத்தியம் என்பது அகத்தி என்ற ஒரு கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது ஒன்றாம். தமிழில் அகத்தி என்பது இருத்தல் போலவே மலையாளத்திலும் அகத்தி என்ற சொல் உண்டு.  செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: பக்கம்.48

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! – அகத்தியர்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே; எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்     அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு