கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும். 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும். 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்பட வேண்டும். 4/2052 : பேரவைத் துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!   பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை…

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு.   இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும். பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார…

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !    எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள்…

உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா!   வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்!   மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை…

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!  தொடர்ச்சியே எடப்பாடி அரசு! – இலக்குவனார் திருவள்ளுவன்

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!   தொடர்ச்சியே எடப்பாடி அரசு!   அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை.   இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி!   நாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சி அடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது.   “நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று  முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா) தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில்…

ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச்…

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! [சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.] அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523) “ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே” புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர்…

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!  கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.  இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக…

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி!    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே…

1 2 5