கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 : அன்றே சொன்னார்கள் 47 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 கட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம். நாம் இப்பொழுது வீட்டிற்குக் குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 அன்றே சொன்னார்கள் 45 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்பண்பின் முதுகுடிநனந்தலை மூதூர் . . …..செழுநகர்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார். …
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3 பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன. இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன. இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2: அன்றே சொன்னார்கள் 42 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன. பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது. மனை என்பது புலவர்களால் பல…
ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள்: தொடர்ச்சி) ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும் அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம். கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு…