ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள்: தொடர்ச்சி) ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும் அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம். கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு…
மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் – அன்றே சொன்னார்கள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தாழிமரம் அறிவோமா? bonsai – தொடர்ச்சி) மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் அன்றே சொன்னார்கள் 10 இன்றைய அறிவியல் அறிஞர்கள் செயற்கையாக மழை பொழியச் செய்கிறார்கள். மழை வேண்டாத பொழுது இயற்கையாகப் பெய்வதற்குரிய முகில் கூட்டத்தை – மேகக் கூட்டத்தை – இடம் பெயரச் செய்து அந்தப் பகுதியில் மழை பெய்ய விடாமல் செய்கிறார்கள். என்ற பொழுதும் பழங்காலத்தில் மழைபற்றிய அறிவியல் உணர்வு பிற நாட்டாரிடம் இல்லை. உரோம் மக்களின் மழைக்கடவுள் பெயர் பொசெய்டன்…
தாழிமரம் அறிவோமா? – bonsai – அன்றே சொன்னார்கள் 14 (விரிவு)
தாழிமரம் அறிவோமா? bonsai அன்றே சொன்னார்கள் 14 தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது….
அன்றே சொன்னார்கள் – காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் –காற்றின் வகைமை தெரியும்! காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில் வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது. கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார். வீச்சு எண்…
அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள்முகிலறிவியலின் முன்னோடி நாமே! வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர் இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும்…
சேமக்குடுவையின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்
(உயிரறிவியலின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர் சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை…
