சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  131-135 131. Abolition of titles   பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது. 132. Abolition of untouchability தீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 126-130 126. Abode உறைவிடம்இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம்   பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும் 127. Abolish   நீக்குஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; நீக்கு   நடைமுறையில் உள்ள ஒன்றை இல்லாதாக்குதல்.   நிறுவனங்கள்/அமைப்புகள் பழக்க வழக்கங்களை நிறுத்தி விடுதல். எ.கா.:  தீண்டாமையை ஒழித்தல்,…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125

(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச்சொற்கள் விளக்கம் 121-125 121. Abnegation மறுதலிப்பு   பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல். 122. Abnormal இயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய   அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள். 123. Abnormality பிறழ்மை   பிறழ்வு   இயல்பு அல்லாத நிலைமையை  அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது. 124. Abnormality of mind      இயல்புகடந்த மனநிலை   இயல்பு திரிந்த மனநிலை…

சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 116. Able வல்லமையுள்ள   ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல்.   ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல். 117. Able bodied வல்லமையர்   உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும்.   உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது…

சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 111. Abjection இழிநிலை   இழிதகவு   இழிதகையான நிலைமையக் குறிப்பது   இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டில் புறக்கணிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் இது குறிக்கும். 112. Abjure   கைவிடு   விட்டொழி   முற்றோக ஒழித்தல் ஆணையிட்டொழி; (சத்தியஞ்செய்து விட்டொழி) ஏற்கெனவே மேற்கொண்ட சூளுரை அல்லது உறுதிமொழியைக் கைவிடுதல். கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுவதையும் குறிக்கும்.   ஆணையிட்டொழி (சத்தியத்தை விட்டொழி) என்னும் பொருளடைய abiūrō என்னும் இலத்தீன்…

சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற   நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன்   நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது.   ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . .  எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு   Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 96. Abeyance   செயலற்ற தன்மை இடைநிறுத்தம்  செயல்நிறுத்தம் நிறுத்தி வைத்தல்   உரியரிலாநிலை   காலவரையறையற்ற அல்லது இடைக்கால செயலற்றநிலையைக் குறிப்பது.   இடைநீக்கம் என்கின்றனர். அவ்வாறு சொன்னால் suspension எனத் தவறான பொருள் கொள்ள நேரலாம். ஆங்கிலத்தில் பொருள் சரிதான். ஆனால், தமிழ் வழக்கில் இடையில் விலக்கி வைப்பது வேறு. முடிவு காண வழியில்லாமல் செயல்பாடின்றி ஒத்தி வைப்பது வேறு. ஒரு கோப்பு…

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை   குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.   18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை   திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.   தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.   தாவு/தாக்கு …

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு) சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 81. Abetment by aid தூண்டல் உதவி   குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது.   குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது. குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது.   தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது…

சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 71. Abbreviate சுருக்கு   நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல்.   காண்க: Abbreviation 72. Abbreviation           குறுக்கம்   குறியீடு சுருக்கக் குறியீடு குறுங்குறி குறிப்பெழுத்து சொல்குறுக்கம் சுருக்கீடு   ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம். திருவள்ளுவருக்குப் பின் என்பதைத்…