பாரதப் பண்பாடு எது? – வை.தட்சிணாமூர்த்தி
சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று’’ என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா…
திருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும்
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும். இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு…