வெருளி நோய்கள் 286 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 286 – 290 286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி. சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்….