இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!    இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…