தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி)    தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி)   தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு    என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்…

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).   மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான்  குறிப்பிடுகிறோம்.  வரலாறு எழுதுவோர் அதற்கு முன்  1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது  தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ,  அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர்…

இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம்    1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை.   ஆனால்,…

மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல்

ஈகியருக்கு நினைவேந்தலும் மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும் மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும் வணக்கம், தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின்…

“மொழிகாக்க உயிர் நீத்த தமிழ் மறவர்கள்”

ஆதிக்க இந்தி, தமிழ்வேரில் கொதிநீர் ஊற்றிய கொடுமையைக் கண்டு சிறையில் மாண்ட வீரச்செம்மல் “நடராசன்!” இந்தி எனும் தேள் தமிழன் தோள் மீது ஏறுவதைக்கண்டு அதை நசுக்கிட எழுந்தான் “தாளமுத்து!” அவன் சிறையில் மடிந்த தமிழ்ச்சொத்து. இந்தியை எரிக்க தன்னுடல் எரித்த முதல் நெருப்பு “கீழப்பழுவூர் சின்னச்சாமி!” இவன்தான் நெருப்புக்குத் தமிழை அறிமுகம் செய்தவன்! தமிழுக்காக தீயைத் தீண்டியது “சிவலிங்கத்தின்” சந்தன உடல்! அது இந்தியை எரிக்க, செந்தீயைத் தின்றது. தமிழைக் காக்க தன்னுடலைத் தீயாக்கி, “இந்தி”யப் பேயைப் பொசுக்க, உயிரைச் சிந்திய தீரன்……