ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம் : “தமிழும் நானும்”

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                                                                                                       தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம்  நிகழ்ச்சி நாள்: மாசி 21, 205 ஞாயிறு 05.03.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: முனைவர் தாயம்மாள் அறவாணன் முனைவர் இரா.திருமாவளவன், மலேசியா முனைவர் வதிலை பிரதாபன், மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode:…

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’- இரா. திருமாவளவன்

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’ ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்! இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது.. இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை…

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா? சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்.. எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்… உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும். அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும். பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக்…

தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன்

தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும் பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351) பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும். உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த…

தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா

தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…