தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளிமாணவி வெற்றிப்பேறு !

தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில்  தேவக்கோட்டை  பள்ளிமாணவி  வெற்றிப்பேறு    தேவக்கோட்டை :  தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில்  தேவக்கோட்டைபெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  வெற்றி பெற்று  அருவினை  ஆற்றினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள்  வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   தேசிய வருவாய் வழி-திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்பிரவரி மாதம் நடந்தது. தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு…

மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…

வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்க!

இளம் மாணவர்கள் வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்ள வேண்டும் வேளாண்மைக் கல்லூரி தலைமையர்(டீன்) பேச்சு   நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் ( 18/03/2016)    தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர்   மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாகச் சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றனர்.         1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வேளாண்மைக் கல்லூரிக்குக் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர்…

தேவாரம் ஒப்பித்தல் போட்டி: வென்றவர்களுக்குப் பாராட்டு விழா

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில்  6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள  பிரிவில்  8 ஆம் வகுப்பு  மாணவி  இராசேசுவரி    முதல்  பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி  தனலெட்சுமி,  6 ஆம் வகுப்பு   மாணவர் இரஞ்சித்து  ஆகிய…