வெருளி நோய்கள் 361-365 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி) 361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். எனவே, இக்குறைபாடுகள் நேரும்…