வெருளி நோய்கள் 356 – 360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 356 – 360 இழிவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இழிவு வெருளி.இழிவு படுத்தப்படுதல், அவமானத்திற்கு உள்ளாதல், தாழ்வுபடுத்தல், மதிப்பிழக்கச் செய்தல்(humiliation) போன்ற சூழல்களில் ஏற்படும் அளவு கடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.இழிவு படுத்துதல் முதலியவற்றை நால்வகையாகப் பிரிக்கின்றனர். தெரிந்தவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல் தெரிந்தவரில் தவறு செய்யாதவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்யாதவை இழிவு படுத்தல் என…
