பொதுமொழி தேவை என்பது தவறு

   இந்தியாவின் அரசியல் பொதுமொழி வேண்டும். இந்திமொழி நாடெங்கும் பெருவழக்கிற்று. அதுவேசிறந்தது என்கின்றனர். அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி இன்றியமையாதது என்பதே தவறு. இந்திய நாடு இந்நிலை வருவதற்கு இந்திமொழி சிறிதும் துணைசெய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன்மொழிகளும் துணைசெய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தி அடிகள் ஆகிய தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்த காலை நாட்டுமொழி அறியாது இடர்ப்பட்டாரில்லை.  அவர்கள் கருத்துகளை அறியுமாறில்லாத தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்தியநாடெங்கும் வழக்கில் உள்ளது எனுங் கூற்று ஒப்பத்தக்கதன்று. இந்திமொழி தென்னாட்டில் வழக்கில்லாதது. வடநாட்டில் சிற்சில…

இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்

  மொழிவேற்றுமையால் மனவேற்றுமை விளையும்.  மொழி ஒன்றுபட்டால் மக்களின்மனமும் ஒன்றுபடும் என்பது மற்றொரு காரணம். இதுவும் அனுபவத்திற்கு முரண்பட்டபொய்யுரை. சாதிபற்றியும் சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்குகளால் கொலை, பழி பாதகங்களும் பகைமையும் ஒரு மொழிபயில்வோருக்குள்ளேயே நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களும் வேற்றுமைஉணர்ச்சிகளை வளர்த்து இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும் கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாத மந்திரி இந்திமொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும்ஏமாற்றமும் ஆகும். – தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு:…

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

    இன்றையநாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலகவழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில், பிற மொழிகளிற் காணும் குறைபாடுகள் சொல்லிறந்தனவென்றும், தமிழ் மொழியில் அத்துணை குறைபாடுகள் இல்லை என்றும் காண்பர். கார்மர் பிரபு (Lord Cormer) என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் குறைகள் சிலவற்றைத் தொகுத்து, அவை புலனாகுமாறு இக்கவியில் விளக்குகின்றனர். “In the English tongue…

‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…