தோழர் தியாகு எழுதுகிறார்  144 : சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா

(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி)  சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா  2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது. 257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட  யாகூபு மேமனுக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி…

தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி) உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் 2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான உரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி) இனிய அன்பர்களே! ·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;         பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;         தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;         மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;         வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும்…