தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உலகத் தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு!…
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள்
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் மாசி 07, 2050 செவ்வாய் 19.02.2019 மாலை 6.00
உலகத் தாய்மொழிநாள் கவியரங்கமும் கருத்தரங்கமும்
மாசி 09, 2048 செவ்வாய் பிப்பிரவரி 21, 2017
தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில் இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம். தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…
தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது – கவிஞர் முருகேசு
உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது. – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 / பிப்.20, 2016 அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும்,…
உலகத் தாய்மொழிநாள், புதுவைத் தமிழ்ச் சங்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
