இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான உலகளாவிய போட்டிகள்
இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க் காப்புக் கழகம் உலகளாவிய போட்டிகள் இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு! மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. – 4 பிரிவுப் போட்டிகள் பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு உரூ.3000/- இரண்டாம் பரிசு உரூ.2000/- மூன்றாம் பரிசு உரூ.1000/- என நான்கு பிரிவுகளுக்கும் வழங்கப் பெறும். அனைத்துப்போட்டிகளுக்குமான…
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள். இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். 7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச்…
தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…
