தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 1-7
(சொற்களஞ்சியம் சுரதா! – தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் : 1-7 1. Geometry – அளவு நூல் கண்டிதமான அளவு நூலில் குத்துக்கு யாதொரு பெருமையும் இல்லை. (அதாவது) நீட்சியும் இல்லை, அகலமும் இல்லை, கனமும்…
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…
சொல்லடா! – சுரதா
சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ! “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா! ‘வானை அளந்திடுவோம்-புது வையம் நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…
உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்
உவமைக் கவிஞர் சுரதா காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் – இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனைப் பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் –…
