ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) 2.தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு…
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?- வைகோ கண்டனம்
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா? வைகோ கண்டனம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;…
ஏழாம் ஆண்டில் கற்க கசடற – திருக்குறள் போட்டி , இலண்டன்
தமிழ் இளையோர் அமைப்பு 7 ஆவது வருடமாகக் கற்க கசடற – திருக்குறள் போட்டி வணக்கம். தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல் வடகிழக்கு – ஞாயிறு, சனவரி 29, 2017 காலை து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ) வடமேற்கு – ஞாயிறு, சனவரி 29, 2017 காலை ஈலிங்கு அம்மன் கோயில், இலண்டன் (Ealing…
மறக்க முடியுமா? : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் “தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.” “தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது” “சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன. இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம். “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக…
காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும். தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…
இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று. “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…
கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து
‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24 நடைபெறுகிறது + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…
முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ
முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விலையுயர்ந்த மரங்கள் சேதம் தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் கருகின. முருகமலை வனப்பகுதியில் உணவகங்கள், அடுமனைகள்(பேக்கரிகள்), ஓய்வுமனைகள் ஆகியவற்றுக்கு அடுப்பு எரிப்பதற்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டியபின்னர் வெட்டிய மரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து வரும் கோரைப்புற்களின் மீது தீயை வைத்து விடுகின்றனர். இவ்வாறு தீ வைப்பதாலும் தற்பொழுது கோடை வெயில் உக்கிரமாக இருப்பதாலும் இந்தத் தீ…
