வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 609-613: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 614-618 614. கடை நிலை வெருளி – Omegaphobia வரிசையில் கடைசியில் இருப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் கடை நிலை வெருளி. கடையில் பொருள் வாங்க அல்லது பயணச்சீட்டு வாங்க அல்லது திரைப்படச் சீட்டு வாங்க அல்லது இதுபோன்ற சூழலில் வரிசையின் கடைசியில் இருப்பதால் தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் தீர்ந்து கிடைக்காமல் போய்விடும், தனக்கு உரிய வாய்ப்பு வராமல் போய்விடும் என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். Omega என்பது கிரேக்க…
