கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) – இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 17 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதைவரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்துவான் உற நிவந்த மேல் நிலை…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) : அன்றே சொன்னார்கள் 55 : இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம். வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90) வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15: அன்றே சொன்னார்கள் 53-இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 14 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15 வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர்  கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:- பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்துணைமாண் கதவம்…