(வெருளி நோய்கள் 614-618: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 619-623 619. கட்டாய மகிழ்ச்சி வெருளி – Sunsmilerophobia கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டாய மகிழ்ச்சி வெருளி. காண்க மகிழ்ச்சி வெருளி-Hedonophobia/Laetophobia 00 620. கட்டணப் பேசி வெருளி – Payphonophobia கட்டணத் தொலைபேசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டணப் பேசி வெருளி. கட்டணப்பேசியில் பேசும் பொழுது கால வரம்பு முடியும் பொழுதெல்லாம் மேற்கொண்டு பேச நாணயத்தைச் செலுத்த வேண்டும்  சில நேரங்களில் நாணயத்தைச் செலுத்தியபின் பேசவும் இயலாது, செலுத்திய…