குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன?- இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 5. தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன?  செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 420) செவி மூலம் பெறும் கேள்விச் செல்வத்தின் சுவையை உணராதவர்கள், வாய் மூலம் பெறும் உணவுச்சுவையை மட்டும் விரும்புபவர்கள் இறந்தாலும் என்ன? உயிரோடு இருந்தாலும் என்ன? தகவலியலறிஞர்கள் கேள்வியறிவு உடையவர்களே வெற்றிகரமான தலைவர்களாகவும் தொழில் தலைவர்களாகவும் உள்ளனர் என்கின்றனர். இரிச்சர்டு…

குறள் கடலில் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார் – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 4 – இலக்குவனார்திருவள்ளுவன் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார்! நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 419) நுட்பமான கேள்விச்செல்வத்தைக் கேட்டு அறியாதவரால், பணிவான சொற்களைக் கூற இயலாது என்கிறார் திருவள்ளுவர். தீவிரமாகக் கேட்பவர்(active listener) அடுத்தவர் என்ன சொல்கிறார என்பதை அடக்கத்துடன் கேட்கும் இயல்பைப்பெற்று விடுகிறார் எனக் கல்வி உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அடக்கத்துடன் கேட்பவர்கள்,…

குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 3 ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா? ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்…

குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 3  கேள்விச்செல்வத்தால் அறியாமையைப் போக்கு! பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 417) நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர். காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 2 எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர். இறைவன் படைத்தது…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 1 மொழிப்போர் நமது பாடத்திட்டத்தில் இடம் பெறாததால்தான் இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போராளிகள் குறித்தோ, இந்தி முதலான பிற மொழித்திணிப்புகளின் கொடுமை குறித்தோ தமிழ்க்காப்பு உணர்வு தேவை என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இனி ஒரு மொழிப்போர் தோன்றாத அளவிற்கு இந்தித்திணிப்புகளும் பிற மொழித்திணி்பபுகளும் இலலாதவாறு ஆவன செய்ய மொழிப்போர் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.   இந்தித்திணிப்பை மட்டும் குறிப்பிடாமல் சமற்கிருதம், ஆங்கிலம் முதலான பிற மொழித்திணிப்புகளையும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் பார்க்கப்போகிறோம். எனவே்தான்,  இந்தித்திணிப்பு என்றோ இந்தி…