வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை

மார்கழி 13, 2047  புதன்கிழமை  28, திசம்பர் 2016 மாலை 4.00 மணி   அண்ணா  பல்கலை வளாகம், சென்னை பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி  நினைவஞ்சலிக் கூட்டம் சி.ஆனந்தன், கணித்தமிழ்ச்சங்கம் கிண்டி  பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் அறிவியல் கழகம் (குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது. மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)

கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.

கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.  தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே,   ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது. நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.  இது குறித்துக் கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்

  கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம் தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம்   சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது.   தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய…

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில்  தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3

பதிவு விவரம்   கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள ‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’ கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது. இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்,…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு

    நண்பர்களே, கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18  ஆகிய இரு நாளும்  சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும். கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு. மீண்டும் விரிவான தகவல்களுடன்……

வேட்டி தீண்டாமை ஒழியட்டும்! தேசிய இனங்களின் உரிமைகள் வெல்லட்டும்!

–      இலக்குவனார் திருவள்ளுவன்     அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட…